Tuesday, October 12, 2004

பல்லவியும் சரணமும்!

சில நல்ல பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியை கண்டு பிடியுங்களேன்! (நாளை நானே சொல்கிறேன்!)

1. தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?
2. முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா?
3. நிறம் பார்த்து வெறுப்போர் முன் படைத்தாய் கண்ணா, நல்ல குணம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா!
4. என் மாடம் முழுதும் விளக்கு! எந்நாளும் இல்லை இருட்டு. என் உள்ளம் போட்ட கணக்கு, ஒரு போதும் இல்லை வழக்கு!
5. பூவுலகின் லட்சியங்கள் பூப்போன்றே வாழும்! தெய்வ சொர்க்க நிச்சயம் தான் திருமணமாய் கூடும்!
6. மெல்லிய பூங்கொடி வளைத்து, மலர் மேனியை கொஞ்சம் அணைத்து, இதழில் தேனைக் குடித்து,
7. கவிஞர் சொன்னதே கொஞ்சம், இனிமேல் காணப் போவதே மஞ்சம்!
8. தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு, பூஞ்சிட்டு, கண்ணல்ல ஓடி வா!
9. கரும்போ, கனியோ, கவிதைச் சுவையோ, விருந்தோர் கொடுத்தான், விழுந்தாள் மடியில்!
10. தண்ணீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள், பனி மேடை போடும் பால் வண்ண மேனி!

என் பழைய நினைவுகளிலிருந்து சிலவற்றை அவசரமாக பிய்த்து பதித்துள்ளேன். சொற்தவறுகள் இருந்தால் மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

7 மறுமொழிகள்:

Jayaprakash Sampath said...

1. சொன்னது நீதானா.. சொல் சொல் - நெஞ்சில் ஓர் ஆலயம்
2. காதல் சிறகை காற்றினில் விரித்து...??????
3. கண்ணா கருமை நிறக் கண்ணா... - நானும் ஒரு பெண்
4. சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம் - மயங்குகிறாள் ஒரு மாது
5. நல்ல மனம் வாழ்க - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
6. பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை
8. என்ன பார்வை உந்தன் பார்வை - காதலிக்க நேரமில்லை
9. பூ மாலையில் ஓர் மல்லிகை - நெஞ்சிருக்கும் வரை

said...

7. இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை

நவன் பகவதி

said...

பாலா,

இதேபோன்று இங்கு சிங்கையின் ஒலியில் 'கண்டுபிடி... கண்டுபிடி...' என்ற ஒரு போட்டி நிகழ்ச்சி தினமும் இப்போது நடைபெறுகிறது. பல்லவியைக்கண்டு பிடித்து ஒலிக்கு குறுந்தகவல் அனுப்பவேண்டும், முதலில் அனுப்புவதற்கு பரிசு.

டேய்... உனக்கு பல்லவியைக்கண்டுபிடிக்கமுடியாட்டி சும்மா போகவேண்டியதான... அதென்ன 'இன்று ஒரு தகவல்'ன்றீங்களா... ஓகேப்பா அப்போ சரி:)

said...

அதென்ன என்னுடைய பின்னூட்டம் கொடுக்கும்போது டிஃபால்ட்டாக (தமிழில்?) Anonymous என்று வந்துவிட்டது. சரி, இப்போ உங்களுக்கு ஒருபோட்டி - நான் யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

enRenRum-anbudan.BALA said...

ICARUS Prakash அவர்கள் 8 மதிப்பெண்கள் பெற்று distinction எடுத்து விட்டார்! நவன் பகவதி மீதமிருந்த இரண்டில் ஒன்றை கண்டு பிடித்து விட்டார். கடைசி பாட்டுக்கான பல்லவியை மட்டும் தான் நான் கூற விட்டு வைத்திருக்கிறீர்கள்!

ICARUS Prakash "காதல் சிறகை காற்றினில் விரித்து" பாடல் வந்த திரைப்படம் என்ன என்று கேட்டிருக்கிறார். "பூ மாலையில் ஓர் மல்லிகை" பாடல் அமைந்த திரைப்படம் "நெஞ்சிருக்கும் வரை" அல்ல! விடைகள் கீழே!

Anonymous யாரென்றும் கண்டுபிடித்து விட்டேன், சிங்கை அன்பு நண்பரே!!!!!

1. சொன்னது நீதானா.. சொல் சொல் - நெஞ்சில் ஓர் ஆலயம்
2. காதல் சிறகை காற்றினில் விரித்து... - பாலும் பழமும்!
3. கண்ணா கருமை நிறக் கண்ணா... - நானும் ஒரு பெண்
4. சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம் - மயங்குகிறாள் ஒரு மாது
5. நல்ல மனம் வாழ்க - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
6. பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை
7. இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை.. --- திரைப்படம்?????
8. என்ன பார்வை உந்தன் பார்வை - காதலிக்க நேரமில்லை
9. பூ மாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு!
10. தேன் சிந்துதே வானம், உனை எனை தாலாட்டுதே --- திரைப்படம்?????

என்றென்றும் அன்புடன்
பாலா

அன்பு said...

சரியா சொன்னேள்...
ஹீம்... இங்க சரணம் ஒலிபரப்பி பல்லவியைக் கண்டுபிடிக்கிறதே பெரும்பாடா இருக்குது. பிரகாஸ் சார் சரணத்தை வாசித்தே பல்லவி கண்டுபிடித்து distinction வாங்குறார்னா பெரிய ஆளுங்கதாம்பா?

அய்யோ.... அந்த இரவுக்கும் பகலுக்கும்.... என்ன படம் - ஏதோ ஒரு எம்சியார் படம் அதான் தெரியும், இதயக்கனியோ ஏதோ ஒன்று. கலக்குங்க.

said...

10. தேன் சிந்துதே வானம், உனை எனை தாலாட்டுதே --- திரைப்படம்?????

Ponnukku Thanga Manasu

Thanks
Subbu

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails